search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சடையால்புதூர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    சடையால்புதூர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 13-ந் தேதி முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடைபெறுகிறது.

    ஆசாரிபள்ளம் அருகே உள்ள சடையால்புதூர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறும். ஜோசப் பள்ளி தாளாளர் அருட்பணியாளர் கிளேட்டன் தலைமை தாங்கி கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். சரல் பங்குதந்தை சிபி மறையுரையாற்றுகிறார்.

    நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடைபெறும். தாளையாங்கோணம் பங்குத்தந்தை ஜான் தாமஸ்க் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    13-ந் தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடைபெறுகிறது. இதில் முட்டம் வட்டார முதல்வர் ரூபஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சுரேஷ் மறையுரை ஆற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    19-ந் தேதி காலை 10 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், தொடர்ந்து 11 மணிக்கு அன்பின் விருந்தும் நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி காலை 8.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் அருட்பணியாளர் எட்வின் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் அம்புரோஸ் மறையுரையாற்றுகிறார்.

    20-ந் தேதி மாலையில் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜோஸ் ஜே பெஸ்கி, பங்கு பேரவை உதவி தலைவர் ஜெஸ்டின், செயலாளர் விக்சன், இணை செயலாளர் ரெட்லின் சோபா, பொருளாளர் ஜோசப் ராஜ் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×