search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • 19-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் தை மற்றும் சித்திரை ஆகிய இரு மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெறும். தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை மாத பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களை அனுமதிக்காமல் பிரம்மோற்சவ விழா நடை பெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு தை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தங்கச் சப்பரம் வீதி உலா நடை பெற்றது. இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.

    பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான வருகிற 19-ந் தேதி காலை 5மணிக்கு கருட சேவையும், கோபுர தரிசனமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி (சனிக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் 7-ம் நாளான வருகிற 23-ந் தேதி (திங்கள்கிழமை) காலை தேரோட்டமும், 26-ந்தேதி இரவு வெட்டிவோ் சப்பரத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.

    பிரம்மோற்சவ நாளில் தினமும் காலை, மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதிஉலா வருகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். கொரோன கட்டுப்பாடுகள் தற்போது முழுவதும் தளர்த்தப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×