என் மலர்
வழிபாடு

பிரம்மோற்ச விழாவின் ஒரு பகுதியாக கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு திருமஞ்சனம்
- தீபதூப நெய்வேத்தியம் வழங்கப்பட்டது.
- சுவாமிக்கும், தாயாருக்கும் ஏழு வகையான மாலைகள் அணிவிக்கப்பட்டது.
திருமலையில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, கல்யாண மண்டபத்தில் சுவாமி மற்றும் தாயாருக்கு காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பாலாஜி ரங்காச்சாரியார் தலைமையில் திருமஞ்சனம் நடைபெற்றது.
முன்னதாக விஷ்வக் சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், நவகலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. தொடர்ந்து தீபதூப நெய்வேத்தியம் வழங்கப்பட்டது.
பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. சுவாமிக்கும், தாயாருக்கும் ரோஜா, சம்பங்கி போன்ற ஏழு வகையான மாலைகள் அணிவிக்கப்பட்டது.
Next Story