search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆரல்வாய்மொழி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நாளை நடக்கிறது
    X

    ஆரல்வாய்மொழி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நாளை நடக்கிறது

    • மதியம் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
    • இரவு 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பொற்றை இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், சுத்திகலச பூஜை, சத்தி பூஜை நடைபெறுகிறது. இதனை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் மேல்சாந்தி கிருஷ்ணபட்டர் நடத்துகிறார்.

    9 மணிக்கு வடக்கூர் அகலிகை ஊற்றிலிருந்து பால்குடம், பறக்கும் காவடி புறப்பட்டு கோவிலை அடைகிறது. 11 மணிக்கு கலச பூஜை, மதியம் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. இதனை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைக்கிறார்.

    மாலை 5 மணிக்கு திருவிளக்குபூஜை, இரவு 9 மணிக்கு பொங்கல் வழிபாடும், அலங்கார தீபாராதனையும் அதனை தொடர்ந்து பலியிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. கொடைவிழா ஏற்பாடுகளை பொற்றை இசக்கியம்மன் கோவில் பூசாரிகள் பாஸ்கர், வெற்றிவேல் தலைமையில் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.

    Next Story
    ×