search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருள்வாக்கு வராத அருளாளர்களின் நாவினில் அலகு
    X

    அருள்வாக்கு வராத அருளாளர்களின் நாவினில் அலகு

    • பருவதராஜ குல மீனவ இனத்தாரே முக்காலியர் எனப்படுவர்.
    • நடப்பது, நடந்தது, நடக்க இருப்பதைக் கூறி அருளும் விதத்தையே அருள்வாக்கு என்பர்.

    தலைமைத் தாய் அங்காளம்மன் திருக்கோவிலில் பூஜை முறையை ஏற்று செய்யும் சிவன்படையார் என்ற பருவதராஜ குல மீனவ இனத்தாரே முக்காலியர் எனப்படுவர். இவர்களால் செய்யப்படும் பூஜைகளே அம்மனுக்கு ஏற்புடையவை.

    முக்காலியர் என்ற மீனவர்களே உடுக்கை, பம்பை, மணி, சிலம்பு ஆகிய ஓசைகளுடன் தங்கள் வாய்க்கு வந்த எந்த பாடலை உருவகப்படுத்திப் பாடினாலும், பாடல்பாடி அழைத்தாலும் அம்மன் விரும்பிய மாந்தரின் பூத உடலில் அங்காளியான அம்மனே உந்தப்பட்டு மருள் என்ற நிலையாகி தன்னைத்தானே மறந்து ஆடி! மருள் ஆடி வந்த நிலையிலேயே கேட்பவர்களின் கேள்வி களுக்கு தகுந்த விதங்களில் நடப்பது, நடந்தது, நடக்க இருப்பதைக் கூறி அருளும் விதத்தையே அருள்வாக்கு என்றே அழைப்பர்.

    இவ்வழக்கம் தொன்று தொட்ட வழிமுறையாக உள்ளது. இவை போக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற இடங்களில் உள்ள அருளாளர்களுக்கு எல்லாம் அருள்தரும் தேவதை அங்காளம்மன் ஆகும். இத்தேவதையின் தலைமையிடம் மலையனூர் ஆகும்.

    அருளாளர்கள் அனைவரும் ஒவ்வொரு அமாவாசை தோறும் தலைமையிட அங்காளம்மன் கோவிலுக்கு வந்து முக்காலியர் என்ற செம்படவர் ஆகிய பூஜை முறை பூசாரிகளிடம் புற்றுமண், சாம்பல், விபூதி, குங்குமம், பூ, பழம் போன்றவற்றை அங்காளம்மன் ஆன்மீக அன்பர்கள் பெற்றும் அருள்வாக்கு சரியாக வராத அன்பர்களின் நாவினில் அலகு போடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

    பலதரப்பட்ட மாநிலத்தில் தீர்க்க முடியாத எந்த பிணி, பீடை, நோய் பிடித்த வர்களை அருளாளர்களே அழைத்து வந்து தலைமையிட கோவிலில் உள்ள பூசாரிகளால் விலக்கிச் செல்வது தொன்று தொட்டு இன்று வரை இருந்து வரும் வழக்கம் உண்மையாக விளங்குகிறது.

    மேலும் தலைமை பூசாரிகளால் செய்யப்படும் அபிஷேகம், அர்ச்சனைகள், ஆராதனைகளுக்கு கட்டுப்பட்டே சேர்வார்த்திகளின் கஷ்டங்களையும், பிணிகளையும், பீடைகளையுமே விலக்குவதாக கருதப்படுகிறது.

    இதைத்தவிர அருளாளர்களுக்கு அருள்வாக்கு எந்த தவறும், பிசகும் இன்றி நன்முறையில் அமையவே இத்திருக்கோவில் பூசாரிகளால் அருளாளர்களுக்கு அருள் வரவழைத்து நாவில் அலகு போடுதல் போன்றவையும் இந்த அருளாளர்களே பலதரப்பட்ட இடங்களில் அங்காளம்மன் குறிமேடை என்று வைத்துக் கொண்டு அங்காளம்மன் குறி சொல்வதாகவும் இவர்களின் மூலமாகவே மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களிலும் மற்ற தினங்களிலும் எண்ணற்ற ஆன்மீக அன்பர்கள் கூட்டம் மலையனூர் வந்து செல்வதாகவும் கருதப்படுகிறது.

    குறிமேடை வைத்துக் கொண்டு குறி சொல்லும் அருளாளர்கள் அங்காளம்மனை மனதில் நிறுத்தி உருவகப்படுத்தி ஒரே நினைவாகி குண்டலி சக்தியை பயன்டுத்தி நிற்கும் வேலையில் குறிகேட்கும் அன்பர்களுக்கு அவர்களின் கஷ்டங்களை போக்கும் உபாயங்களை அருளாளர்களே கூறி அருள்வதாகவும் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. இதையே அங்காளம்மன் அருள்வாக்கு என்று கூறப்படுகிறது.

    அங்காளம்மன் அருளாளர்கள் அம்மனை வேண்டி குண்டலி சக்தியாக்கி நிலைநிறுத்திக் கொள்ளும்போது தன் நிலையை மறந்து அம்மனிடமே அவரவர்கள் ஐக்கியமாகி விடுவதாகவும், அந்த நேரங்களில் அம்மன் அருளால் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அருளாளர்கள் கூறும் அருள் வார்த்தைகளே அருள்வாக்கு என்றே கருதி அதன்படியே நடப்பது இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுவே அருள்வாக்கின் சிறப்பம்சமாகும்.

    Next Story
    ×