search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கடந்த 3 நாட்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 30 ஆயிரம் பக்தர்கள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கடந்த 3 நாட்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 30 ஆயிரம் பக்தர்கள்

    • இந்த மலைப்பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும்.
    • இந்த மலை ஏற பக்தர்களுக்கு மார்ச் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்படும்.

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் மலைப்பாதையில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவைகளை கடந்து சென்றால் 7-வது மலையில் சுயம்புலிங்கத்தை தரிசிக்க முடியும்.

    இந்த மலைப்பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும். இந்த மலைப்பாதையில் ஏற பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்படும். இந்த நாட்களில் ஏராளமானவர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள். இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

    இதையடுத்து கோவை மாவட்டம் அல்லாமல் சென்னை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள், முதியவர்கள் என பலர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக பக்தர்கள் மலையேற்றம் செய்கின்றனர்.

    கடந்த 5-ந் தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு மலையேற்றத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 30 ஆயிரம் பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு சுவாமி தரிசனம் செய்துள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலநிலை மாற்றம் காரணமாக 5-வது, 6-வது மற்றும் 7-வது மலை ப்பகுதியில் கடும் குளிர் காணப்படுகிறது.

    திடீரென மழையும் பெய்து வருகிறது. இதனால் மலையேற்றத்தில் ஈடுபடும் வயதானவர்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பக்தர்கள் காலநிலையை கருத்தில் கொண்டு மலையேற்றத்தில் ஈடுபட வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×