என் மலர்
வழிபாடு

பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா முன்னிட்டு தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருக்குளத்தைச் சுற்றி திருவீதி உலா வரும் வைபவம் நடைபெறும்.
திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவிலில் சித்திரைப் பூத்திருவிழா அம்மனுக்கு அதிகாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 9 மணிஅளவில் அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தயிர், இளநீர் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பூமாயி அம்மன் வெள்ளி கவச ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளான பெரியார்நகர், வாணியன்கோவில் தெரு, தம்பிபட்டி, தென்மாபட்டு, புதுப்பட்டி, கல்லாகுழித்தெரு, பிரபாகர் காலனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பால்குடம், பூத்தட்டு, முளைப்பாரி சுமந்து வந்து அம்மனை பூச்சொரிந்து வழிபட்டனர்.
பின்னர் சந்தனகாப்பு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாலை 4 மணி்க்கு கொடிமரம் அருகில் மேல் புஷ்ப அலங்காரம் நடந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணி்க்கு அம்மனுக்கு கொடியேற்றி காப்புக் கட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து 10 நாட்களுக்கு வசந்த பெருவிழாவும் நடைபெறுகிறது.
இதனையொட்டி தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருக்குளத்தைச் சுற்றி திருவீதி உலா வரும் வைபவமும் நடைபெறும். 10-ம் திருநாள் அன்று பொங்கல் விழா மற்றும் இரவில் வெள்ளி ரதத்தில் உற்சவ அம்பாள் திருவீதி உலா நடைபெற உள்ளது.

Next Story