என் மலர்tooltip icon

    வழிபாடு

    அங்காள பரமேஸ்வரி
    X
    அங்காள பரமேஸ்வரி

    அரியாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா

    அரியாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் இந்திர விமானம், காமதேனு, அன்னம், ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது.
    அரியாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத மயானக் கொள்ளை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து விசேஷ அலங்காரத்தில் மகா தீபாரானை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவில், சூரிய பிரபை அலங்காரத்த்தில் விநாயகர், முருகன் மற்றும் சிவசக்தி சாமிகள் வீதியுலா நடந்தது.

    விழா நாட்களில் இந்திர விமானம், காமதேனு, அன்னம், ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணியளவில் ரணகளிப்பும் அதனை தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை தேரோட்டம், மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேரோட்டத்தினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். விழாவின் நிறைவாக 11-ந் தேதி காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.
    Next Story
    ×