என் மலர்

  வழிபாடு

  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்
  X
  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு தினசரி வருகிறார்கள். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
  மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் -அபிராமி அம்மன் கோவில் உள்ளது. 60, 70, 80 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கான சதாபிஷேகம், மணிவிழா, சஷ்டியப்தபூர்த்தி உள்ளிட்டவை இங்கு மட்டுமே நடைபெறும் என்பது சிறப்பம்சமாகும்.

  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு தினசரி வருகிறார்கள். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

  கடந்த சில மாதங்களாக ெகாரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்ததால் கோவிலில் முன்பு போல கூட்டம் இருந்தது. இந்த நிலையில் தற்ே்பாது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

  இதனால் அமிர்தகடேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் வரத்து குறைந்து காணப்படுவதால் அர்ச்சனை கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.

  இதுகுறித்து அர்ச்சனைக்கடை வியாபாரி சந்துரு பிரபு கூறுகையில், ‘அமிர்தகடேஸ்வரர் கோவிலை நம்பி நாங்கள் கடை நடத்தி வருகிறோம். பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தால் பூ, மாலை, பழங்கள், தேங்காய் போன்ற பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகும். இதன் மூலம் எங்களுக்கும் அன்றாடம் வருவாய் கிடைக்கும்.

  தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால், திருக்கடையூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

  Next Story
  ×