search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் மூலவர் மீதுசூரிய ஒளி விழுந்ததை படத்தில் காணலாம்.
    X
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் மூலவர் மீதுசூரிய ஒளி விழுந்ததை படத்தில் காணலாம்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளியானது மூலவரின் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
    தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். மூலவர் சுயம்புவாக தோன்றிய இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளியானது மூலவரின் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

    மார்கழி மாதத்தின் முதல் நாளான நேற்று அதிகாலையில் சூரிய உதயத்தை தொடர்ந்து கோவில் மூலவரின் மீது சூரிய ஒளி விழுந்தது. சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். சிவபெருமானை சூரிய பகவான் வழிபடுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    முன்னதாக மார்கழி மாத பிறப்பையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், திருப்பள்ளி எழுச்சி, உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.
    Next Story
    ×