என் மலர்

  வழிபாடு

  பட்டுப்புடவைகள் சாற்றிய கோலத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி.
  X
  பட்டுப்புடவைகள் சாற்றிய கோலத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி.

  ஆண்டாள் கோவிலில் விடிய, விடிய நடந்தது: 108 பட்டுப்புடவை சாற்றும் வைபவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விடிய விடிய நடந்த இந்த விழாவின்போது ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர்.
  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு தினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தநிலையில் கார்த்திகை மாதத்தையொட்டி ஆண்டாள் கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதேபோல இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கவுசிக ஏகாதசி விழா நடைபெறும்.

  அதன்படி நேற்று இரவு இந்த விழா நடைபெற்றது.

  இரவில் விடிய விடிய நடந்த இந்த விழாவின்போது ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அப்போது 108 பட்டுப்புடவைகளை சாற்றும் வைபவம் நடைபெற்றது. குளிர்காலம் தொடங்குவதின் முன்னோட்டமாக இந்த விழா நடைபெறுகிறது.

  இந்த விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று காலை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  Next Story
  ×