என் மலர்

  வழிபாடு

  மண்டைக்காடு பகவதி அம்மன்
  X
  மண்டைக்காடு பகவதி அம்மன்

  மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை இன்று நள்ளிரவு நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழாவின் 6-ம் நாள், பங்குனி மாத மீனபரணி கொடை விழா மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை வலிய படுக்கை பூஜை நடக்கிறது.
  பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு நடக்கிறது.

  இந்த கோவிலில் மாசிக்கொடை விழாவின் 6-ம் நாள், பங்குனி மாத மீனபரணி கொடை விழா மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை வலிய படுக்கை பூஜை நடக்கிறது.

  அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. இதில் பல்வேறு பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, பொரி, அவல் போன்றவை அம்மன் முன்பு படைக்கப்பட்டு நடத்தப்படும் பூஜையே வலிய படுக்கை என்னும் மகாபூஜை ஆகும். இந்த பூஜையில் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

  Next Story
  ×