என் மலர்

  வழிபாடு

  கோவிலுக்கு காவடி எடுத்து செல்லும் பக்தர்கள்.
  X
  கோவிலுக்கு காவடி எடுத்து செல்லும் பக்தர்கள்.

  வேளிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி பயணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்வேறு காவடிகளை குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்கள் மற்றும் கோவில்களில் இருந்து எடுத்து வருவது வழக்கம். இந்த ஆண்டு இந்த காவடி ஊர்வலம் இன்று (10-ந் தேதி) தொடங்கியது.
  குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு இன்று பொதுப்பணித்துறை, போலீஸ் துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு வகையான காவடிகள் பவனியுடன் சென்றன.

  திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் நீராதாரம் பெற்று மக்கள் செழிப்புடன் வாழவும், விவசாயம் செழித்தோங்கவும் பொதுப்பணித்துறை சார்பிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியுடன் வாழ போலீஸ்துறை சார்பிலும், குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் செல்வது வழக்கம்.

  இந்த காவடி ஊர்வலத்தில் பன்னீர் காவடி, புஷ்ப காவடி, பால் காவடி, வேல் காவடி, சூரிய காவடி, பறக்கும் காவடி, மயில் காவடி, தொட்டில் காவடி உட்பட பல்வேறு காவடிகளை குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்கள் மற்றும் கோவில்களில் இருந்து எடுத்து வருவது வழக்கம். இந்த ஆண்டு இந்த காவடி ஊர்வலம் இன்று (10-ந் தேதி) தொடங்கியது.

  காவடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தொடர்ந்து 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்பது மரபாகும். தென்கரை தோப்பு ஊர் மக்கள் சார்பில் விவசாயிகள் புலியூர்குறிச்சியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு சாலையில் 1500 வாழை குலைகளை இரு புறங்களிலும் நாட்டி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பாதசாரிகளை பரவசபடுத்தினர்.

  இந்த காவடி பவனி இரணியல், கண்ணாட்டு விளை, பாரதி நகர், தென்கரை, பத்மநாபபுரம், வழிக்கலம்பாடு, கைதோடு, அரசமூடு, கான்வென்ட் சந்திப்பு, குமாரகோவில், கல்குறிச்சி, மணலி, சரல்விளை, முட்டை காடு ஆகிய ஊர்களில் இருந்து பங்கேற்றன.

  இதுபோன்று தக்கலை பொதுப்பணித்துறை, போலீஸ் துறை சார்பிலும் காவடி பவனி நடந்தது இதில் தக்கலை டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன், பத்மனாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீனதயாளன், மத்திய அரசு வக்கீல் வேலுதாஸ் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  இது போல் பொதுப் பணித்துறை சார்பில் ஓய்வு பெற்ற என்ஜினீயர் மோகன்தாஸ் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து காவடி புறப்பட்டது. இந்த காவடி ஊர்வலத்தில் முக்கிய நிகழ்ச்சியாக 3 அடி முதல் 12 அடி வரை உள்ள வேல் காவடிகளை பக்தர்கள் அலகு குத்தி செல்வது வியப்புக்குரியதாக இருக்கும்.

  இன்று வேளிமலை முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, உ‌ஷ பூஜை மற்றும் காவடியுடன் பக்தர்கள் கொண்டுவரும் பஞ்சாமிருதம், நெய், தேன் களபம், பன்னீர், இளநீர் இவைகளுடன் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை ஆகியவை நடக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
  Next Story
  ×