என் மலர்

  வழிபாடு

  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
  X
  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோடி அர்ச்சனை மீண்டும் தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
  கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4-30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படும்.

  பின்னர் மாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வழிபடுவது வழக்கம்.

  அம்மனுக்கு அபிஷேகம், தங்க ஆபரணங்கள்மற்றும் வைரக்கிரீடம் அணிவித்தல், சந்தன காப்பு அலங்காரம், நகை அலங்காரம், பட்டுப் புடவை சாத்துதல், அங்கி சாத்துதல், கன்னியாபூஜை, குழந்தைகளுக்கு சோறு கொடுத்தல், அன்னதானம் செய்தல் போன்ற பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழிபாடுகளை நடத்த விரும்பும் பக்தர்கள் அதற்கான கட்டணம் செலுத்தி இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். இதேபோல அர்ச்சனை நடத்தும் பக்தர்களுக்கு வசதியாக இந்த கோவிலில் கோடி அர்ச்சனை திட்டமும் செயல் படுத்தப்பட்டு உள்ளது.

  இந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டு உள்ளன.

  அந்த அடிப்படையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்தும் இந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை நடத்தி அதில் பங்கேற்று வருகிறார்கள்.
  Next Story
  ×