search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமிதோப்பு பதியில் இருந்து அரசம்பதிக்கு முத்திரி பதம் ஊர்வலம்
    X
    சாமிதோப்பு பதியில் இருந்து அரசம்பதிக்கு முத்திரி பதம் ஊர்வலம்

    சாமிதோப்பு பதியில் இருந்து அரசம்பதிக்கு முத்திரி பதம் ஊர்வலம்

    மேளதாளங்கள் முழங்க, முத்துக்குடையும், சிங்காரி மேளமும் முன்செல்ல முத்திரி பதம் மற்றும் சந்தன குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அரசம்பதியை நோக்கி சென்றனர்.
    பொற்றையடி அருகில் உள்ள அரசம் பதியில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி கடந்த 12-ந் தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சரவிளக்கு பணிவிடையும், காலை 9 மணிக்கு சாமிதோப்பில் உள்ள முத்திரிகிணற்றிலிருந்து முத்திரி பதம்எடுத்து, பெண்கள் சுருள் ஏந்தி தலைமைப்பதியில் அய்யா தவம் புரிந்த வடக்கு வாசல் பகுதிக்கு வந்தனர்.

    அங்கு அய்யாவை வழிபட்டனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க, முத்துக்குடையும், சிங்காரி மேளமும் முன்செல்ல முத்திரி பதம் மற்றும் சந்தன குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அரசம்பதியை நோக்கி சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு அன்பாலய நிறுவனர் சிவச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊர்வலம் சாமி தோப்பில் இருந்து புறப்பட்டு கரூம்பாட்டூர் வழியாக அரசம்பதி வந்தடைந்தது.

    அங்கு உச்சிப்படிப்பு நடைபெற்றது. தொடர்ந்து சமபந்தியும், பகல் 3 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பும், இரவு 7 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும், இரவு 9 மணிக்கு அன்னதானமும் தொடர்ந்து அருளிசை வழிபாடும், நள்ளிரவு 12 மணிக்கு சான்றோர் குல மங்கையர்கள் அய்யா வைகுண்ட சாமிக்கு பால் வைத்து பணிவிடை செய்தலும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×