search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை தீபம்
    X
    ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை தீபம்

    கார்த்திகையையொட்டி ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை தீபம்

    கொரோனா கட்டுப்பாடு காரமணாக சாமி-அம்பாள் கோவிலின் 3-ம் பிரரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சொக்கப்பனை தீபத்தை கண்டுகளித்தனர்.
    தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் திருக்கார்த்திகையை யொட்டி நேற்று சொக்கப்பனை மகா தீபம் ஏற்றப்பட்டது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று மாலை 6 மணி அளவில் கருவறையில் உள்ள சாமி-அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மகாதீப ஆராதனை பூஜைகள் நடை பெற்றன.

    தொடர்ந்து கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தின் தூண்களில் ஏராளமான தீப விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. பிரகாரத்தின் மைய மண்டபத்திலும் சிவலிங்க வடிவில் விளக்குகள் ஏற்றப்பட்டன. தீப விளக்கொளியில் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம் பிரகாசமாக காட்சியளித்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு சாமி மற்றும் அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் கோவிலின் கிழக்குவசால் பகுதிக்கு எழுந்தருளினர்.

    கொரோனா கட்டுப்பாடு காரமணாக சாமி-அம்பாள் கோவிலின் 3-ம் பிரரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சொக்கப்பனை தீபத்தை கண்டுகளித்தனர். இதேபோல் ராமநாதபுரத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோவிலிலும் சொக்கப்பனை தீபம் ஏற்பட்டது. முன்னதாக சாமிக்கும், முருக பெருமானுக்கும் சிறப்பு மகாதீப ஆராதனை பூஜைகளும் நடைபெற்றன.
    Next Story
    ×