search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதியில் பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு

    தரிசன டிக்கெட்களை நேரடியாக திருப்பதியில் வழங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் வெளியிடுவதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும்.
    திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், நேரடியாக வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன் அளிப்பது அல்லது ஆன்லைனில் டிக்கெட் வழங்குவது குறித்தும் இன்னும் 2, 3 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. திருப்பதியில் பக்தர்களை அதிக அளவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    எனவே விரைவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் 30-ந்தேதி வரை ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அதை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தரிசன டிக்கெட்களை நேரடியாக திருப்பதியில் வழங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் வெளியிடுவதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும்.

    மாநிலத்தில் கொரோனா குறைந்தாலும் சித்தூர் மாவட்டத்தில் எண்ணிக்கை தொடர்ந்து குறையாமல் உள்ளது. இதற்கான காரணத்தை தேவஸ்தானம் ஆராய்ந்து வருகிறது.

    கொரோனா பாதிப்பு எண்ணிகையை வைத்து விரைவில் ஏழுமலையானுக்கு நடக்கும் சுப்பரபாதம், அர்ச்சனை போன்ற ஆர்ஜித் சேவைகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.

    திருப்பதியில் தற்போது தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    Next Story
    ×