என் மலர்

  ஆன்மிகம்

  கள்ளழகர் கோவிலில் தைலக்காப்பு உற்சவம் தொடக்கம்
  X
  கள்ளழகர் கோவிலில் தைலக்காப்பு உற்சவம் தொடக்கம்

  கள்ளழகர் கோவிலில் தைலக்காப்பு உற்சவம் தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை (16-ந் தேதி) அழகர் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் சன்னதியில் நூபுர கங்கையில் தைலக்காப்பு உற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது
  அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று தைலக்காப்பு உற்சவம் தொடங்கியது. இதில் அங்குள்ள மேட் டு கிருஷ்ணன் சன்னதியில் தேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் வைகுண்டநாதர் சேவையில் காட்சி தந்தார். பட்டர்களின் வேத மந்திரங்கள், மேள,தாளங்கள் முழங்க தீபாராதனை பூஜை நடந்தது.

  இன்று அதே சன்னதியில் சீராப்தி நாதர் சேவை நடைபெறும். நாளை (16-ந் தேதி) அழகர் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் சன்னதியில் நூபுர கங்கையில் தைலக்காப்பு உற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் அனுமதி இல்லாமல் இந்த திருவிழா நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  Next Story
  ×