search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி மல்வாட குண்டா மலையிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சி.
    X
    திருப்பதி மல்வாட குண்டா மலையிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சி.

    திருப்பதி கோவிலில் 2 நாட்களுக்கு பிறகு நடைபாதை திறப்பு

    ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலர்களின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோவில் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலவிருட்சமாக சம்பங்கி மரத்தை தேர்வு செய்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலர்களின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோவில் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புராணங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்ச் செடிகளை கொண்ட பூந்தோட்டம் திருமலையில் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஏழுமலையானுக்கு தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி குறிப்பிடத்தக்க இடத்தை பெற்று வருகிறது.

    பவிஷ்யோத்ர புராணம் 13-வது பாகம் 33 மற்றும் 34-வது ஸ்லோகங்களில் அப்போதைய அரசர் தொண்டைமான் சக்கரவர்த்தியிடம் ஏழுமலையான் தனக்கான கோவிலைக் கட்டும் போது கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் சம்பங்கி தோட்டத்தை அகற்ற வேண்டாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏழுமலையான் கோவிலில் உள்ள ஒரு பகுதி தற்போது சம்பங்கி பிரகாரம் என்று அழைக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் சம்பங்கி மரம் ஏழுமலையானின் தலவிருட்சமாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் மலையில் இருந்து மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டது.

    நேற்று இரவு முதல் மழை வெள்ளம் வடிய தொடங்கியது. இதையடுத்து நடைப்பாதையில் விழுந்த மண், மரங்கள் மற்றும் பாறைகள் அகற்றும் பணி நடந்தது. இன்று காலை முதல் நடைபாதையில் தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதியில் நேற்று 28,851 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,705 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.96 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது.
    Next Story
    ×