என் மலர்

  ஆன்மிகம்

  அய்யா வைகுண்டர்
  X
  அய்யா வைகுண்டர்

  வெள்ளையந்தோப்பு நாராயணசாமி கோவிலில் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்தாமரைகுளம் அருகே உள்ள வெள்ளையன் தோப்பு நாராயணசாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அய்யாவுக்கு திருக்கல்யாண விழா நடக்கிறது.
  தென்தாமரைகுளம் அருகே உள்ள வெள்ளையன் தோப்பு நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த மாதம் 21- ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அய்யாவுக்கு திருக்கல்யாண விழா நடக்கிறது. இதையொட்டி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு தொடக்கம், தொடர்ந்து அய்யாவின் திருக்கல்யாண நிகழ்ச்சி போன்றவை நடைபெறும்.

  இரவு 7 மணிக்கு பலவகையான மேளங்களுடன் அய்யா வாகனத்தில் பவனி வருதல், இரவு 9 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறும். விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 11 மணிக்கு உச்சிப்படிப்பு, பிற்பகல் 2 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, தொடர்ந்து அய்யாவின் பட்டாபிஷேகம் நடைபெறும்.

  மாலை 5 மணிக்கு பட்டாபிஷேக பணிவிடை, மாலை 6 மணிக்கு வாகன பவனி, இரவு 9 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு அய்யாவுக்கு பள்ளி அலங்கார பணிவிடை போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.
  Next Story
  ×