என் மலர்

  ஆன்மிகம்

  தீர்த்த தண்ணீரை பக்தர்கள் மீது ஊற்றும் பணியை தொடங்கி வைத்த யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன்
  X
  தீர்த்த தண்ணீரை பக்தர்கள் மீது ஊற்றும் பணியை தொடங்கி வைத்த யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன்

  ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தக்கிணறுகள் இன்று திறப்பு: பக்தர்கள் புனித நீராடினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.
  ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாமல் மூடப்பட்டன. தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் வழக்கம்போல் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

  6 மாதத்திற்கு மேலாக தீர்த்த கிணறுகள் மூடப்பட்டு கிடப்பதால் தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தீர்த்த கிணறை விரைந்து திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

  இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.

  அதன்பேரில் 190 நாட்களுக்குப் பின்பு இன்று (1-ந்தேதி) அதிகாலை 6 மணிமுதல் ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடினர்.

  இதனால் இந்த புனித தீர்த்தங்களில் புனித நீர் இறைத்து ஊற்றும் தனியார் பணியாளர்கள் 424 பேர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

  இனிவரும் காலங்களில் கொரோனா குறைந்து பக்தர்களின் வருகை அதிகம் வரும் நிலை இருப்பதால் ராமேசுவரம் பகுதியில் கோவிலை சுற்றி சாலையோர வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் மற்றும் ஆட்டோ வாகனங்கள் உள்பட அனைத்து தொழிலாளிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  Next Story
  ×