search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சதுரகிரி மலை ஏற இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி
    X
    சதுரகிரி மலை ஏற இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

    3 மாதங்களுக்கு பிறகு சதுரகிரி மலை ஏற இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

    பிரதோ‌ஷமான இன்று மலையேற அதிகாலை முதலே ஏராளமானோர் தாணிப்பாறை அடிவாரத்திற்கு திரண்டனர். காலை 7 மணிக்கு அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
    விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    சதுரகிரி மலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக
    சதுரகிரி
    மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவிலில் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடந்து வந்தன.

    கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதன்படி, இன்று பிரதோ‌ஷம், 20-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இன்று முதல் 21-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். காலை 7 மணி முதல் 10 மணிக்குள் மலையேற அனுமதி வழங்கப்படும். இரவு கோவிலில் தங்க அனுமதி இல்லை. மாலை 4 மணிக்குள் மலையடி வாரத்திற்கு பக்தர்கள் வந்து சேர வேண்டும்.

    பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பிரதோ‌ஷமான இன்று மலையேற அதிகாலை முதலே ஏராளமானோர் தாணிப்பாறை அடிவாரத்திற்கு திரண்டனர். காலை 7 மணிக்கு அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வனத்துறையினரும், போலீசாரும் பக்தர்களின் உடமைகளை சோதனை செய்து அனுமதித்தனர்.

    பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தன.

    தற்போது கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சதுரகிரிமேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்தால் கோடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

    எனவே மலை மேல் உள்ள ஓடைப்பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்புடன் கடக்க வனத்துறையினர், போலீசார், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    இதையும் படிக்கலாம்...
    Next Story
    ×