search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்மலையனூர் அருகே அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் விழா
    X
    மேல்மலையனூர் அருகே அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் விழா

    மேல்மலையனூர் அருகே அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் விழா

    பழமையான மாரியம்மன், பொன்னியம்மன், கங்கையம்மன் ஆகிய கோவில்களில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
    மேல்மலையனூர் அருகே கீழ்செவளாம்பாடி கிராமத்தில் பழமையான மாரியம்மன், பொன்னியம்மன், கங்கையம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் நேற்று முன்தினம் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் மேளதாளம் முழங்க 3 பூங்கரகங்கள் முன் செல்ல பக்தர்கள் கூழ் குடங்களை சுமந்தபடி கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு சாகை வார்த்தல் நடைபெற்றது.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சாமி வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×