search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
    X
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆடி திருவிழாக்கள் நடத்த ஏற்பாடு

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடித்திருவிழாக்கள் கோவிலுக்குள்ளேயே உள் திருவிழாவாக நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடி கொண்டு அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஊரடங்கால் முருகப்பெருமானுக்கு உகந்த வைகாசி விசாக திருவிழா, ஆணி முப்பழ பூஜை விழா ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் நடைபெற்றது போல ஆடி கார்த்திகை, ஆடிப்பூரம் திருவிழாக்கள் கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடைபெற வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

    இந்த நிலையில் இந்த விழாக்கள் கோவிலுக்குள்ளேயே உள் திருவிழாவாக நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) ஆடிக்கார்த்திகை திருவிழா கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடைபெறும். அதாவது கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பின்னர் திருவாட்சி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறும். இதேபோல வருகிற 10-ந்தேதி (செவ்வாய்கிழமை) ஆடிப்பூரம் விழாவும் உள் திருவிழாவாக நடக்கிறது.

    ஆடிப்பூர திருவிழாவையொட்டி சேத்தியில் தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். இதையடுத்து திருவாட்சி மண்டபத்தில் தெய்வானை அம்பாள் மட்டும் புறப்பாடு நிகழ்வு நடைபெறும். இந்த 2 திருவிழாக்களிலும் சுவாமி புறப்பாடு சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×