என் மலர்

  ஆன்மிகம்

  வடக்குவாசல் செல்வி அம்மன்
  X
  வடக்குவாசல் செல்வி அம்மன்

  வடக்குவாசல் செல்வி அம்மன் கோவிலில் ஆடி பொங்கல் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து இக்கோவிலில் ஆடி பொங்கல் வைத்து சுவாமிக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
  சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.காளாப்பூரில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து இக்கோவிலில் ஆடி பொங்கல் வைத்து சுவாமிக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

  கடந்த வருடமும் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக ஆடிப்பொங்கல் விழா நடைபெறவில்லை. இந்த வருடம் தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்தனர்.

  இந்தநிலையில் ஆடிப்பொங்கல் விழாவான நேற்று பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஒரு சிலர் ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து அம்மன், மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
  Next Story
  ×