search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது
    X
    காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது

    காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது

    வேட்டையன்பட்டியில் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் ஆடி திருவிழா நேற்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    சிங்கம்புணரியில் உள்ள விஸ்வகர்மா சங்கத்திற்கு சொந்தமான வேட்டையன்பட்டியில் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் ஆடி திருவிழா நேற்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதையொட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதை தொடர்ந்து 10 நாள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும்.

    29-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 1-ந்தேதி பாலாபிஷேகமும், 2-ந்தேதி ஆடிப்பெருக்கு தினமும், 3-ந்தேதி முளைப்பாரி வழிபாடும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
    Next Story
    ×