என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆஞ்சநேயர்
    X
    ஆஞ்சநேயர்

    ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு: சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்

    ஆனி மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆனி மாத அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தர்மபுரி எஸ்.வி. ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹரநாத சாமி கோவில் தெருவில் உள்ள தாஸ
    ஆஞ்சநேயர்
    கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் சாமி கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஊரடங்கு காரணமாக 2 மாதங்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையுடன் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குப்புசெட்டிப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    Next Story
    ×