search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோலைமலை முருகன் கோவில்
    X
    சோலைமலை முருகன் கோவில்

    சோலைமலையில் சங்கடகர சதுர்த்தி பூஜை

    சோலைமலை முருகன் கோவிலில் உள்ள வித்தக விநாயகர் சன்னதியில் ஆனி மாத சங்கட ஹர சதுர்த்தி பூஜை நடந்தது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
    அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில் உள்ளது.

    இங்குள்ள வித்தக விநாயகர் சன்னதியில் ஆனி மாத சங்கட ஹர சதுர்த்தி பூஜை நடந்தது. இதில் விநாயகருக்கு அருகம்புல் உள்ளிட்ட பல்வேறு மாலைகள் சாத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள வேத மந்திரங்கள் முழங்க நடந்தது.

    அருகில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், வேல்சன்னதியிலும் பூஜைகள் நடந்தது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×