search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மன்
    X
    அம்மன்

    தொட்டியம் பகுதி அம்மன் கோவில்களில் ஆனி மாத பவுர்ணமி பூஜை

    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
    ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு தொட்டியம் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    தொட்டியம் வளையல்கார தெருவில் இருக்கும் பாப்பாத்தி அம்மன் அரங்கநாதன் கோவில், பாலசமுத்திரம் பகவதி அம்மன் கோவில், ஜெ.ஜெ.நகர் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் பவுர்ணமி விழா குழுவினர் சார்பாக அபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×