என் மலர்

  ஆன்மிகம்

  முடிகாணிக்கை செலுத்தி மாரியம்மனை வணங்கிய பக்தர்கள்
  X
  முடிகாணிக்கை செலுத்தி மாரியம்மனை வணங்கிய பக்தர்கள்

  ஊரடங்கு நேரத்திலும் முடிகாணிக்கை செலுத்தி மாரியம்மனை வணங்கிய பக்தர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தியும், கோவில் முன்புறம் சூடம் ஏற்றியும், தேங்காய்உடைத்தும் வழிபட்டனர்.
  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நேரத்திலும் அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக நேற்று அதிகாலையிலேயே இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் வந்தனர் தொடர்ந்து அவர்கள் முடிக்காணிக்கை செலுத்தியும், கோவில் முன்புறம் சூடம் ஏற்றியும், தேங்காய்உடைத்தும் வழிபட்டனர். மேலும் நேற்று முகூர்த்த நாள் என்பதால் புதுமணதம்பதிகள் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில், சமயபுரம்மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். சில ஜோடிகள் ஆதி
  மாரியம்மன்
  கோவில் முன்பாக திருமணமும் செய்து கொண்டனர்.

  தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மளிகை கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு கூட்டம் கூட்டமாகச்சென்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும், முககவசம் அணியாமலும் சென்றதை பார்க்கமுடிந்தது.இது கொரோனா வைரஸ் பரவலை அதிகப்படுத்தும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.
  Next Story
  ×