என் மலர்

  ஆன்மிகம்

  வில்லியனூர் முத்தாலவாழி மாரியம்மன்
  X
  வில்லியனூர் முத்தாலவாழி மாரியம்மன்

  வில்லியனூர் முத்தாலவாழி மாரியம்மன் கோவில் செடல் திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வில்லியனூர் மேற்கு வீதியில் உள்ள முத்தாலவாழி மாரியம்மன் கோவிலில் வருகிற 23-ந் தேதி செடல் உற்சவம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
  வில்லியனூர் மேற்கு வீதியில் உள்ள முத்தாலவாழி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் செடல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சப்பரத்தில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  விழாநாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வீதிஉலா நடக்கிறது. வருகிற 23-ந் தேதி செடல் உற்சவம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×