என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மோகனூர் பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை விழா
    X
    மோகனூர் பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை விழா

    மோகனூர் பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை விழா

    மோகனூரில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது. புஷ்பாஞ்சலி, கூட்டு வழிபாடு, தீபாராதனை நடக்கிறது.
    மோகனூரில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை விழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வியில் வெற்றியடைவும், தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறவும், இயற்கை சீற்றங்கள் குறையவும், பருவமழை பெய்து விவசாயம் மேன்மை அடையவும், உலக நன்மை வேண்டியும் இந்த விழா நடத்தப்படுகிறது..

    அதன்படி தினமும் காலை 8.30 மணிக்கு அபிஷேகம், லட்சார்ச்சனை, மேதா ஹயக்ரீவர், மேதா சரஸ்வதி வித்யாஞான பலப்பரத மகா மந்திரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 8 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.

    விழாவில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு புன்யாக வாசனம், ஹோம சங்கல்பம், லட்சார்ச்சனை நிறைவு, பூர்ணாகுதி, ஹயக்ரீவர் சிறப்பு திருமஞ்சனம், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் மாலை 6 மணிக்கு ஹயக்ரீவர் உற்சவமூர்த்தி கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து புஷ்பாஞ்சலி, கூட்டு வழிபாடு, தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×