என் மலர்

  ஆன்மிகம்

  சவுந்தரராஜ பெருமாள்
  X
  சவுந்தரராஜ பெருமாள்

  நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களுள் 19-வது தலமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையில் வெள்ளிப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடும், மாலையில் கருட வாகனம், யானை வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலாவும், பெரிய தேரோட்டமும் நடைபெற்றது.

  விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சவுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உபய நாச்சியார்களுடன் புறப்பாடாகி கோவில் வளாகத்தில் உள்ள சார பு‌‌ஷ்கரணி தீர்த்த குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து மேளதாளம், கண்கவர் வாணவேடிக்கையுடன் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×