என் மலர்
ஆன்மிகம்

மாதேஸ்வரன் கோவில்
மாதேஸ்வரன் கோவிலில் யுகாதி திருவிழா: தமிழக பக்தர்களுக்கு தடை
கொரோனா தொற்று காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாதேஸ்வரன் மலையில் நடக்கும் யுகாதி திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் ஸ்ரீமலை மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் யுகாதி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யுகாதி திருவிழா வருகிற 10-ந் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா தொற்று காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாதேஸ்வரன் மலையில் நடக்கும் யுகாதி திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் மாதேஸ்வரன் மலை கிராமத்தையொட்டி உள்ள கிராம மக்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story