என் மலர்

  ஆன்மிகம்

  அதியமான்கோட்டையில் காளியம்மன் கோவிலில் சாமி ஊர்வலம்
  X
  அதியமான்கோட்டையில் காளியம்மன் கோவிலில் சாமி ஊர்வலம்

  அதியமான்கோட்டையில் காளியம்மன் கோவிலில் சாமி ஊர்வலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதியமான்கோட்டையில் உள்ள சுயம்பு ஸ்ரீ காளியம்மன் கோவில் விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் ஊர்வலம் நடக்கிறது.
  நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டையில் உள்ள சுயம்பு ஸ்ரீ காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கியது.

  விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் அலங்கார சேவைகள் மற்றும் தேரோட்டம் நடந்தது.

  நேற்று அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் ஊர்வலம் நடக்கிறது.
  Next Story
  ×