என் மலர்

  ஆன்மிகம்

  திரவுபதியம்மன்
  X
  திரவுபதியம்மன்

  நாகூர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகையை அடுத்த நாகூரில் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  நாகையை அடுத்த நாகூரில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜையும், தீமிதி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வருகிற 5-ந்தேதி மாலையில் நடக்கிறது.
  Next Story
  ×