என் மலர்

  ஆன்மிகம்

  சோமனூர் மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.
  X
  சோமனூர் மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.

  மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாகாளியம்மன் கோவிலில் பூவோடு எடுத்தல், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கம்பம் கங்கையில் சேர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
  கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூரில் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் உள்ள மாகாளியம்மனுக்கு பூச்சாட்டு, பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கம்பம் நடும் விழா, இளைஞர்கள் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி, அம்மன் அழைத்தல், ஆபரணம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதைதொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் திருவிழா நடைபெற்றது.

  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து பூவோடு எடுத்தல், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கம்பம் கங்கையில் சேர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற் றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.
  Next Story
  ×