என் மலர்

  ஆன்மிகம்

  வீரமாச்சியம்மன்
  X
  வீரமாச்சியம்மன்

  வீரமாச்சியம்மன் கோவில் திருவிழா 31-ந்தேதி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெகமம்-தளி ரோட்டில் பிரசித்தி பெற்ற வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது.
  நெகமம்-தளி ரோட்டில் பிரசித்தி பெற்ற வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை மறுநாள் (26-ந் தேதி) காலை 10 மணிக்கு நெகமத்தில் இருந்து திருமூர்த்தி மலைக்கு தீர்த்தம் எடுக்க புறப்படுதல், 29-ந் தேதி மாலை 3 மணிக்கு கப்பளாங்கரையில் உள்ள தீர்த்தக்கிணற்றிற்கு தீர்த்தம் எடுக்க செல்லுதல், இரவு 10 மணிக்கு சக்தி அழைத்தல், பூஜை வழிபாடு, 30-ந் தேதி காலை 6 மணிக்கு பூஜை வழிபாடு, சுறாமீன் சிக்காட்டம், இரவு 8 மணிக்கு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது.

  31-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருக்கல்யாணம், 9 மணிக்கு மாவிளக்கு, மாலை 4 மணிக்கு பூவோடு எடுத்து வருதல், இரவு 11 மணிக்கு கும்பம் கங்கையில் விடுதல் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ந் தேதி திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், 2-ந் தேதி மாலை 4.30 மணிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. திருவிழா நாட்களில் இரவு சிறப்பு பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி, மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞரணி ஆகியோர் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×