என் மலர்

  ஆன்மிகம்

  காப்பு தயாரிக்கும் பணிகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபடும் காட்சி.
  X
  காப்பு தயாரிக்கும் பணிகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபடும் காட்சி.

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: காப்பு தயாரிக்கும் பணி மும்முரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் காப்பு அணிந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்காக சுமார் 51 ஆயிரம் காப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
  காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 9-ந்தேதி காலை கொடியேற்றம் திருவிழா தொடங்குகிறது. 16-ந்தேதி முளைப்பாரி எடுத்தல், 17-ந்தேதி பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு அணிந்து திருவிழா தொடங்கும் நாளில் இருந்து விரதம் இருப்பார்கள்.

  இதை தொடர்ந்து சுமார் 51 ஆயிரம் காப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

  கோவில் சாமி சிலை முன்பு வைக்கப்பட்ட மஞ்சளை எடுத்து காப்பு தயாரிக்கும் பணிகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டனர். திருவிழா தொடங்க இருப்பதை தொடர்ந்து பெண்கள் மஞ்சள் ஆடையுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×