என் மலர்

  ஆன்மிகம்

  அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
  X
  அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

  ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் மற்றும் உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினர்.
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலிருந்து சுந்தர்ராஜ பெருமாள் புறப்பட்டு உத்தமர்கோவில் மண்டபம் வந்தடைந்தார். இரவு முழுவதும் அங்கு தங்கினார். பின்னர் நேற்று காலை புறப்பட்டு 9 மணிக்கு கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தடைந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. இரவு 9 மணிவரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை அன்பில் சென்றடைகிறார்.

  இதுபோல் மாசிமகத்தை முன்னிட்டு உத்தமர் கோவில் உற்சவர் புருஷோத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது. அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் இரவு அங்கிருந்து புறப்பட்டு கோவில் சென்றடைந்தார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×