
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. பின்னர் செங்கமலை ஆண்டவருக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும், தப்பாட்டம் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.