
அதன்படி காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவின் பேரில் தை மாத முதல் வெள்ளிக்கிழமை அன்று 16 பேறுகளும் கிடைக்க வேண்டி ஷோடச மகாலட்சுமி தீப பூஜை நடைபெற்றது. 2-வது வெள்ளிக்கிழமை ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள திதி தோஷங்கள் விலக திதி நித்யா தேவதா தீபபூஜை நடைபெற்றது. 3-வது வெள்ளிக்கிழமை கலிதோஷம் நீங்க சப்த சதீ தீப பூஜை நடைபெற்றது.
நேற்று 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி 108 திருவிளக்கு பூஜை கோவிலில் நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், செல்வங்கள் நிலைத்து இருக்க வேண்டியும் இந்த பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கடைசி வெள்ளிக்கிழமையான வருகிற 12-ந்தேதி உபநிஷத்பாராயணம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை குஞ்சிதபாதம், செயல் அலுவலர் பாலமுருகன், மேலாளர் பரணிதரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.