என் மலர்
ஆன்மிகம்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள்

பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வல்லம் புறவழிச்சாலை பாலம் வழியாக பழனி செல்வதற்கு திருச்சி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வருகிற 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள உள்ள பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து வருவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று வல்லம் புறவழிச்சாலை பாலம் வழியாக பழனி செல்வதற்கு திருச்சி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது தஞ்சை கீழவாசல் மற்றும் பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை மேற்கொண்டனர்.

Next Story