search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கோவில்
    X
    திருச்செந்தூர் கோவில்

    திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
    திருச்செந்தூர் :

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது.

    காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும்.

    ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×