
கொரோனா காரணமாக கோவில்களில் வேப்பிலை தோரணமாக கட்டப்பட்டு இருந்தது. ஒரு சில கோவில்களில் பக்தர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீரும் வழங்கப்பட்டது. கோவை ராஜவீதியில் உள்ள மாகாளியம்மனுக்கு வெள்ளை முள்ளங்கி, கேரட், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளால் பாரதமாதா அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கெம்பட்டி காலனி வன பத்ரகாளியம்மனுக்கு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட வண்ண பூக்களை கொண்டு மூவர்ண அலங்காரம் செய்யப்பட்டது.
ரத்தினபுரியில் உள்ள முத்துமாரியம்மனுக்கு ரூ.200, ரூ.100, ரூ.50 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளால் மகாலட்சுமி அலங் காரம் செய்யப்பட்டு இருந்தது. தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள பிளேக் மாரியம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், ராமநாதபுரம் முத்தி அம்மன், சிங்காநல்லூரில் உள்ள மகா சக்தி மாசாணியம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்திலும், சின்னவேடம்பட்டி பிளேக்மாரியம்மன், ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் சீர்காழி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கொரோனா காரணமாக பெரிய கோவில்களில் பக்தர் கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதனால் கோனியம்மன், தண்டுமாரியம்மன் உள்ளிட் கோவில்களில் பக்தர்கள் இன்றி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.
துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சி ரங்கம்மாள் காலனியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மன் வெள்ளி ஊஞ்சலில் வைத்து பூஜை செய்தனர். துடியலூர் மீனாட்சி கார்டன் ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பன்னிமடை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், கருணாம்பிகை கோவில், கணபதி மணியகாரம்பாளையம் பிரிவில் உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளிசிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராமாச்சியம்பாளையம் மகாளியம்மன், பதுவம்பள்ளி எம்.ராயர்பாளையம் மாரியம்மன் ஆகிய கோவில்களில் அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம் உள்பட 18 வகையான திரவிய அபிஷேகம், அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது. கோவில் களில் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.