என் மலர்
ஆன்மிகம்

கொடியேற்றத்துக்கு பின்னர் கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.
திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழா வான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 5.20 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் வீரபாகு பட்டர் கொடியேற்றினார். இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா நாட்களில் கோவில் வளாகத்தில்உள்ள கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கத்தில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, திருவாசகம் முற்றோதுதல், பரதநாட்டியம், திருப்புகழ் வீணைஇன்னிசை, திருப்புகழ்நடனம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
10-ம் நாளான வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story