search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்
    X
    தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

    தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

    தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் வராகி அம்மனுக்கு இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது.
    தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு கணபதிஹோமம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் 2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) வராகி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    3-வது நாள் குங்கும அலங்காரம், 4-வது நாள் சந்தன அலங்காரம், 5-வது நாள் தேங்காய்ப்பூ அலங்காரம், 6-வது நாள் மாதுளை அலங்காரம், 7-வது நாள் நவதானிய அலங்காரம், 8-வது நாள் வெண்ணெய் அலங்காரம், 9-வது நாள் கனிவகை அலங்காரம், 10-வது நாள் காய்கறி அலங்காரம், 11-வது நாள் புஷ்ப அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலிக்கிறார்.

    விழாவின் கடைசி நாளில் வராகி அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் செல்வம், சுரேஷ், மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×