என் மலர்

  ஆன்மிகம்

  நரசிம்மர் பற்றி சிறப்பு தகவல்கள்
  X

  நரசிம்மர் பற்றி சிறப்பு தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தம்மிடம் யார் வந்து எதைக் கேட்டாலும் அதைக் கேட்டபடியே கொடுக்கும் குணம் கொண்டவன் நரசிம்மர். நரசிம்மர் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

  சோகத்தூர் யோக நரசிம்மர்

  வந்தவாசி அருகே சோகத்தூரில் யோக நரசிம்மர் கோவில் உள்ளது. பிரம்மாவுடைய சோகத்தை தீர்த்து வைத்ததால் இந்த ஊர் சோகத்தூர் என்று பெயர் பெற்றது. இங்கு சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. நரசிம்மர் ஜெயந்தியன்று சுவாதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், சாமி வீதி உலா நடக்கிறது. இந்த சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய பலன், நினைத்த காரியம் நடக்கும். புத்திர பேரு கிடைக்கும். சுவாதி ஹோமத்தில் பங்கேற்க முன் அனுமதி பெற வேண்டும்.

  தொடர்புக்கு- நரசிம்ம பட்டாச்சார், 82485 64734.

  அந்திலி: லட்சுமி நரசிம்மர் கோவில்

  விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சி புரம் தாலுகா, அரகண்டநல்லூர் ரெயில் நிலையம் அருகே அந்திலியில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 8 நரசிம்மர் கோவில்களில் இது முக்கியமான கோவிலாகும். இங்கு கருடன் வடிவில் உள்ள பாறை மீது பெருமாள் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இது கருடனுக்கு பெருமாள் காட்சி அளித்த தலமாகும்.

  நரசிம்மருக்கு முதல் வணக்கம்

  திருப்பதி வெங்கடாஜலபதி தன் திருமணத்திற்கு முன்பு அகோபிலம் சென்று நரசிம்மரிடம் ஆசிகள் பெற்றார். திருக்கல்யாணம் நடைபெற்றதும் முதலில் நரசிம்மருக்கு நிவேதனம் செய்த பிறகே அனைவரும் உணவருந்தினர். ஆகவே நரசிம்மரையும் வெங்கடாஜலபதியையும் தரிசித்தால் சிறப்பான வாழ்வு அமையும்.  நாளை என்பது நரசிம்மரிடம் இல்லை

  நாளை என்பதில்லை நரசிம்மனிடம் என்பது பழமொழி. வழிபட்ட உடன் பலன் தருவது நரசிம்ம அவதாரத்திற்கே உரிய தனிச் சிறப்பாகும். பிரகலாதனைப் போன்ற ஆழ்ந்த, மெய்யான பக்தியுடனும், மிகுந்த நம்பிக்கையுடனும் வழிபடுவர்களின் கோரிக்கைகளை நரசிம்மர் புறக்கணித்ததோ காலம் தாழ்த்தியதோ இல்லை. தம்மிடம் யார் வந்து எதைக் கேட்டாலும் அதைக் கேட்டபடியே கொடுக்கும் குணம் கொண்டவன் நரசிம்மன். தன் பக்தன் மீது நரசிம்மனுக்கு அவ்வளவு பிரியம்.

  நரசிம்மருக்கு 30 பெயர்கள்

  நரசிம்மருக்கு உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன.

  சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் நல்லது.

  விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன.

  சிங்கதலை, மனித உடல்

  நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.

  ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்

  ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் தாயார் சன்னதிக்கு அருகில் உள்ளது மேட்டழகிய சிங்கர் கோவில். பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லட்சுமி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோவிலும் கட்டுவித்தான்.

  கருவறையில், மஹாலட்சுமியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லட்சுமி நரசிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கலாம். மிகப் பெரீய்ய உருவம். சுமார் எட்டு அடி உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரசிம்மப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்துகிறது.
  Next Story
  ×