search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலதெய்வ வழிபாடு குறித்து சங்கராச்சாரியாரின் கருத்து
    X

    குலதெய்வ வழிபாடு குறித்து சங்கராச்சாரியாரின் கருத்து

    குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை, மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் குறிப்பிட்டுள்ளார்.
    குல தெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை, மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

    “ஒரு குடும்பத்தின் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வமே ‘குலதெய்வம்’ ஆகும். முன்னோர்கள் என்றால், தந்தைவழி பாட்டன்- பாட்டி ஆகியோரை கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள தந்தை வழி பாட்டன் வரிசையில், கச்சிதமான ஒழுங்குமுறை இருப்பதை காண முடியும். அதை ‘கோத்திரம்’ (உட்பிரிவு) என்று சொல்வார்கள். மற்ற கோத்திரத்தில் பிறந்த பெண்கள்தான் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர்களின் வாழ்க்கைத் துணையாக இருந்திருப்பார்கள். ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்படாமல் வாழ்க்கை பாதையை அவர்கள் அமைத்துக்கொண்டிருப்பார்கள். அதனால், பரம்பரையானது சங்கிலி போல ஒரே சகோதரத்துவ தொடர்ச்சியாக அமைந்து இருக்கும். இது ஒரு முக்கியமான சமூக உளவியல் ஒழுங்குமுறை சார்ந்த விஷயமாகும்.

    அவர்கள் அனைவருமே கோத்திர வழி மாறாதபடி, குலதெய்வம் என்னும் தெய்வ சக்தியை வழி வழியாக பிரார்த்தனை செய்திருப்பார்கள். தலைமுடி எடுப்பது, காது குத்துவது போன்ற நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்த உலகத்தில் ஆயிரம் கோவில்கள் இருந்தாலும், குலதெய்வக் கோவிலுக்கு சின்ன வயதிலேயே அனைவரையும், தாய்- தந்தையர் அழைத்துச் சென்று வழிபடக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். அதன்படி குல தெய்வ கோவிலில் நிற்கும்போது, குறிப்பிட்ட ஒருவரது பரம்பரை வரிசையில் அவர் நிற்பதாக ஐதீகம். அந்த வரிசை முறையிலான தொடர்பை வேறு எந்த விதத்திலும் அமைத்துக்கொள்ள இயலாது.”
    Next Story
    ×