என் மலர்

  ஆன்மிகம்

  மங்கல தீர்த்தம் சுவரை சுற்றிலும் புதிதாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருவதை காணலாம்.
  X
  மங்கல தீர்த்தம் சுவரை சுற்றிலும் புதிதாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருவதை காணலாம்.

  வருகிற 12-ந்தேதி ராமேசுவரத்தில் 30 தீர்த்தங்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரத்தில் 30 தீர்த்தங்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
  புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலை சுற்றி 108 தீர்த்த கிணறுகள் பல இடங்களில் அமைந்துள்ளன. மேலும் ராமேசுவரம் தீவு பகுதிகளை சுற்றியுள்ள தீர்த்த கிணறுகளை விவேகானந்தா கேந்திரம் மூலம் புனரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

  இதில் அனுமன் தீர்த்தம், தர்மர் தீர்த்தம், ஜடா தீர்த்தம், மங்கல தீர்த்தம் உள்பட 30 தீர்த்தங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த 30 தீர்த்தங்களை பக்தர்களுக்கு அர்ப்பணிப்பதற்கான நிகழ்ச்சி வருகிற 12-ந் தேதி விவேகானந்தா கேந்திரம் மூலம் தங்கச்சிமடம் மங்கல தீர்த்த வளாகத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி 120 கலசங்களில் 30 தீர்த்தங்களின் புனிதநீர் வைக்கப்பட்டு யாகபூஜை நடைபெறுகிறது.

  12-ந் தேதி தங்கச்சிமடம் மங்கல தீர்த்தத்தில் நடைபெறும் தீர்த்த கலச பூஜையில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 11-ந் தேதி ராமேசுவரம் வந்து சங்குமால் கடற்கரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அவர் 12-ந் தேதி காலை கார் மூலமாக புறப்பட்டு தங்கச்சிமடத்திற்கு 8 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கு நடைபெறும் தீர்த்த கலச பூஜையில் கலந்து கொள்கிறார்.

  பின்னர் அங்கிருந்து ரெயில்வே நிலையம் அருகே உள்ள ராணிமங்கம்மாள் சத்திரத்திற்கு வருகை தரும் கவர்னர் அங்கு சிறிது நேரம் தியானம் செய்கிறார். அதன் பின்னர் காலை 10.30 மணியளவில் சீதா தீர்த்தம் அருகே உள்ள கோசாமி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தங்களின் சிறப்பு குறித்த புத்தகங்களை வெளியிட்டு கவர்னர் பேசுகிறார்.

  இதையொட்டி மங்கல தீர்த்தம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் சுத்தப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.
  Next Story
  ×